!DOCTYPE html>

0

பிறப்பு நட்சத்திரம் : 1. அசுவினி

தன்மைகள் : செல்வந்தர், புத்திசாலிகளாக இருப்பார். விவாதம் செய்வதில் கெட்டிக்காரர். ஆடம்பரத்தை விரும்பக் கூடியவர். பக்திமான், கல்விமான், பிறகுக்கு அறிவுரை சொல்பவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 2. பரணி

தன்மைகள் : நன்றி மிக்கவர். திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்லும் ஆற்றல் கொண்டவர். அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவரான இவர், வசதியாக வாழ விரும்பக் கூடியவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 3. கார்த்திகை

தன்மைகள் : சிறந்த பக்திமான். மென்மையானவர், செல்வந்தர். ஆனால் கல்வியில் இவர் சுமார் ரகம் தான். வாழ்க்கை தகுதி அதிகம் கொண்ட இவர் பழகுவதில் பண்பாளர்களாக இருப்பார்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 4. ரோகிணி

தன்மைகள் : கம்பீரமான தோற்றம் கொண்டவர். உல்லாசப்பிரியரான இவர், கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமான தோற்றம் கொண்டவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 5. மிருகசீரிடம்

தன்மைகள் : தைரியசாலிகளான இவர் முன்கோபி. தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் அதிகம் கொண்டவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 6. திருவாதிரை

தன்மைகள் : எளிமையான தோற்றமும், எளிமையை விரும்பக் கூடியவர்களுமான இவர், சாமர்த்தியசாலி. திட்டமிட்டுப்பணி செய்வதில் வல்லவர். விவாதம் செய்வதில் வல்லவர். சுபநிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தக் கூடிய தகுதி மிக்கவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 7. புனர்பூசம்

தன்மைகள் : கல்விமான், சாதுர்யப் பேச்சாளர் இவர். ஊர்சுற்றுவதில் ஆர்வம் கொண்ட இவர் நன்றிமிக்கவர். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அதிக விருப்பம் கொண்டவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 8. பூசம்

தன்மைகள் : பிறரை மதித்து நடக்கக் கூடியவர். பக்தியில் நாட்டம் கொண்ட இவர், வைராக்கியம் மிக்கவர். நண்பர்களை அதிகம் நேசிக்கக் கூடிய இவர் புகழ்மிக்கவர். மென்மையான மனம் படைத்தவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 9. ஆயில்யம்

தன்மைகள் : செல்வந்தர், தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர். நல்ல செலவாளி. ஆடம்பரப்பிரியரான இவர் சொன்ன சொல்லை காப்பாற்றும் சத்தியவானாகவும், நேர்மை மிக்கவராகவும் இருப்பார்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 10. மகம்

தன்மைகள் : ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகம் இருக்கும். தர்ம சிந்தனை கொண்ட இவர், பழக இனிமையானவர். எந்த விஷயத்தில் நேர்மையாக நடக்க விரும்பக் கூடியவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 11. பூரம்

தன்மைகள் : ஒழுக்கமானவர், புத்திசாலி. விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம் அதிகம் கொண்டவர். உண்மையை விரும்பக் கூடிய இவர், செல்வாக்கு மிக்கவராகவும், பேச்சுத்திறன் மிக்கவராகவும் இருப்பார்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 12. உத்திரம்

தன்மைகள் : நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகக் கூடியவர். நன்றி மறவாத இவர், சுகபோக வாழ்க்கை வாழ்வதை விரும்பக் கூடியவ இவர் உறவினர்களை நேசிக்கக் கூடியவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 13. அஸ்தம் தன்மைகள் : ஆடை, ஆபரணம் அணிவதில் ஆர்வமிக்க இவர்,கல்வியில் ஆர்வம் கொண்டவர். கலையில் ஆர்வம் கொண்ட இவர், நகைச்சுவையாகப் பேசக் கூடியவர். தாய் மீது பாசம் கொண்ட இவர், இனிமையாக பழகக் கூடியவர்.

பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 14. சித்திரை தன்மைகள் : ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவர்களான இவர் கல்விமான். தைரியசாலியாக இருந்தாலும் எதிரி மீதும் இரக்கம் காட்டக் கூடியவர். சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 15. சுவாதி தன்மைகள் : புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படக் கூடியவர். சுகபோக வாழ்க்கையை விரும்பக் கூடிய இவர், பழக இனியவர். நம்பிக்கைக்கு உரிய இவர், யோகம் மிக்கவர்.

பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 16. விசாகம்

தன்மைகள் : வியாபார ஆர்வம் கொண்ட இவர், சாமர்த்தியசாலி. கலைகளில் ஆர்வம் கொண்ட இவர் தர்மவான். சுறுசுறுப்பானவராக இருந்தாலும் தற்பெருமை கொண்டவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 17. அனுஷம்

தன்மைகள் : நேர்மையான இவர் அந்தஸ்து மிக்கவர். அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொண்ட இவர் அரசால் பாராட்டு பெறுபவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 18. கேட்டை

தன்மைகள் : கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் துணிச்சலானவர். குறும்பு செய்வதில் வல்லவர்களான இவர் முன்கோபி, சாமர்த்தியசாலி. புகழ்மிக்கவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 19. மூலம்

தன்மைகள் : சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய இவர் நல்ல கல்வியாளர். உடல்பலம் மிக்க இவர் நல்ல நீதிமான். புகழை விரும்பக் கூடிய இவர் அடக்கமிக்கவர்களாக காணப்படுவார்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 20. பூராடம்

தன்மைகள் : சுக போக வாழ்க்கையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், செல்வாக்குமிக்கவர். பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவரான இவர் கடமையில் அதிக ஆர்வம் கொண்டவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 21. உத்திராடம்

தன்மைகள் : தைரியசாலியான இவர் கலையில் அதிக ஆர்வம் கொண்டவர். பொறுமைசாலியான இவர் நினைத்ததை சாதிக்கக் கூடியவர். சாதுர்யமாகப் பேசி எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 22. திருவோணம்

தன்மைகள் : பக்திமானான இவர் நல்ல சமூகசேவகர். சொத்து சுகம் அதிகம் கொண்ட இவர், பிறரை மதிக்கக் கூடியவர். மற்றவர்களுக்கு உதவுவதில் வல்லவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 23. அவிட்டம்

தன்மைகள் : கம்பீரமான தோற்றம் கொண்ட இவர், செல்வாக்கு மிக்கவர். தைரியசாலிகளான இவர் முன்கோபியும் கூட. மனைவியை நேசிப்பதை போலவே கடமையிலும் அதிக ஆர்வத்துடன் நேசித்து ஈடுபடக் கூடியவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 24. சதயம்

தன்மைகள் : வசீகரமான தோற்றம் கொண்ட இவர், செல்வந்தராகவும், பொறுமைசாலியாகவும் இருப்பார். முன்யோசனை கொண்ட இவர், திறமையாக செயல்படுக் கூடியவர். ஒழுக்கமான பழக்க வழக்கங் கொண்டவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 25. பூரட்டாதி

தன்மைகள் : மன திடமம் மிக்கவரான இவர் நல்ல பலசாலிகளாக இருப்பார். சுக போக வாழ்க்கையில் நாட்டம் கொண்ட இவர் பழக இனியவர். தொழிலில் ஆர்வம் மிக்க இவர், குடும்பத்தை நேசிக்கக் கூடியவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 26. உத்திரட்டாதி

தன்மைகள் : கல்வியாளர், சாதுர்யமாகப் பேசசும் திறமைசாலி. ஆபரண பிரியரான இவர் சிறந்த பக்திமானாகவும் இருப்பார். கடமையில் ஆர்வம் மிக்கவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

பிறப்பு நட்சத்திரம் : 27. ரேவதி

தன்மைகள் : தைரியசாலியாக இவர் நேர்மையானவராகவும், எதிரியை வெல்லக் கூடியவராகவும் இருப்பார். சுக போகத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தற்புகழ்ச்சியை விரும்பக் கூடியவர். அதே சமயம் பழக இனியவர்.
பிறப்பு நிலை : தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தை சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.

0

அதிபதி : கேது
அதிர்ஷ்ட தெய்வம் : முதல் கடவுளான விநாயகரை வணங்குவது அவசியம். சதுர்த்தி தினத்தில் கணபதி வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் சிவப்பும் கலந்த பல நிறங்கள்
அதிர்ஷ்ட எண் : 5,7,9
அதிர்ஷ்ட கல் : வைடூரியம்

அதிபதி : சுக்கிரன்
அதிர்ஷ்ட தெய்வம் : காலையில் கண் விழிக்கும் போது மகா லட்சுமியை படத்தைப் பார்த்து வணங்குவதும். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 3,6,8
அதிர்ஷ்ட கல் : வைரம்

அதிபதி : சூரியன். இந்த நட்சத்தினர் வணங்க வேண்டியது சிவ பெருமனை
அதிர்ஷ்ட தெய்வம் : சிவ பெருமான். அதோடு இந்த நட்சத்திரத்தினர் பிரதோஷத்தன்று நந்தி பகவானையும், சிவபெருமானை தரிசனம் செய்வது சிறப்பானதாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 1,5,7
அதிர்ஷ்ட கல் : மாணிக்க கல்

அதிபதி : சந்திரன்
அதிர்ஷ்ட தெய்வம் : அம்மன் வழிபாடு. அதுவும் பெளர்ணமி அன்று அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 2,3,9
அதிர்ஷ்ட கல் : முத்து

அதிபதி : செவ்வாய்
அதிர்ஷ்ட தெய்வம் : செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3,6,9
அதிர்ஷ்ட கல் : பவளக்கல்

அதிபதி : ராகு
அதிர்ஷ்ட தெய்வம் : ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறந்தது.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 1,4,7
அதிர்ஷ்ட கல் : கோமேதக கல் பதித்த மோதிரம் அல்லது டாலராக அணியலாம்.

அதிபதி : குரு
அதிர்ஷ்ட தெய்வம் : வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை நெய் திபம் ஏற்றி வழிபடுதலும், கொண்ட கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2,3,9
அதிர்ஷ்ட கல் : புஷ்பராக கல்

அதிபதி : சனி
அதிர்ஷ்ட தெய்வம் : தினமும் காலையில் குல தெய்வ வழிபாடும். ஐயப்பனை வழிபட்டு வருவதால் பல நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 5,6,8
அதிர்ஷ்ட கல் : நீலக்கல்

அதிபதி : புதன்
அதிர்ஷ்ட தெய்வம் : சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றியும், நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. ஏகாதசி விரதம் மிகச் சிறந்த பலனை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண் : 1,5,8
அதிர்ஷ்ட கல் : பச்சைக்கல் என்னும் மரகதம்